ரெய்னாவுக்கு என்ன ஆச்சு..? சமூக வலைத்தளங்களில் இரங்கல்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (19:56 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இறந்துவிட்டதாக சமூக வலைத்தலங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த தகவலை உண்மை என நினைத்து பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான சுரேஷ் ரெய்னா கார் விபத்தில் இறந்துவிட்டதாக வந்திகள் பரவின. மேலும், பல யூடியூப் சேனல்களிலும் இந்த செய்திகள் பரவியது. 
 
இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். நான் கார் விபத்தில் இறந்துவிட்டது போன்ற வீடியோக்கள் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களால் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தயவு செய்து இதுபோன்ற செய்திகளை தவிர்த்துவிடுங்கள்.
 
இறைவனின் கருணையால் நான் நலமான இருக்கிறேன். என்னைப் பற்றி தவறாகச் செய்தி வெளியிட்ட யுடியூப் சேனல் குறித்து முறைப்படி புகார் செய்யப்பட்டு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்