இந்நிலையில் தற்போது இந்தியக் கிரிக்கெட் வாரியம், இனிமேல் ஐசிசி தொடர்களில் இந்திய அணியைப் பாகிஸ்தான் அணி இருக்கும் க்ரூப்பில் இடம்பெறச் செய்ய வேண்டாம் என ஐசிசிக்குக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பிசிசிஐ-யின் இந்த முடிவும் இருக்காலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.