இந்த தொடரில் ஆரம்பத்தில் சொதப்பிய ரோஹித் ஷர்மா தற்போது தன்னுடைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்துக் கலக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் டி 20 போட்டிகளில் 12000 ரன்கள் சேர்த்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை விராட் கோலிக்குப் பிறகு படைத்துள்ளார்.