11 மணிக்கு புழல் ஏரியில் நீர்திறப்பு… மக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (09:27 IST)
சென்னையை அடுத்துள்ள புழல் ஏரியில் அடைமழை காரணமாக நீர் திறக்கப்பட உய்ள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று காலை முதல் தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அருகில் இருக்கும் சென்னையின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி தனது கொள்ளளவை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு உபரிநீர் வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீர் வெளியேறும் கால்வாய் ஓரம் அமைந்துள்ள காவாங்கரை சாமியார்மடம், முல்லை வாயில், சடையன் குப்பம், பாயசம் பாக்கம் ஆகிய பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்