ஓபிஎஸ் கருத்திற்கு தினகரன் வரவேற்பு!

சனி, 6 நவம்பர் 2021 (22:29 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓபிஎஸ் சசிகலாவை அதிமுகவைல் சேர்ப்பது குறித்து சரியான கருத்துக் கூறியுள்ளார் என தினகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்ற  சசிகலா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அதிமுக கொடியைப் பயன்படுத்தினார். அத்துடன் அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்துக் கூறினார். இதனையடுத்து சமீபத்தில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் என ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையே ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்துக் தினகரன், ஓபிஎஸ் சசிகலாவை அதிமுகவைல் சேர்ப்பது குறித்து சரியான கருத்துக் கூறியுள்ளார். எடப்பாடி பலவீனமாக உள்ளதால் அவர் பதற்றத்தில் தடுமாறி சசிகலா குரித்து அவதூறாகப் பேசுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்