சசிகலா யாருடைய பினாமி? அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் உதயநிதி!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (09:15 IST)
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது குறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் டிடிவி தினகரனின் உறவினருமான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அடுத்து ஆண்டு அவர் விடுதலை ஆவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் சமீபத்தில் சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் முடக்கியது. இதனைத்தொடர்ந்து  சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. இதில் சிறுதாவூர், கொடநாடு பங்களா உள்ளிட்ட சொத்துக்கள் அடங்கும். 
 
இதனிடையே இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தனது ட்விட்டர் பக்கத்தில், ’ரூ.2000 கோடி சொத்து பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கம' - ஒருவரி செய்தியுடன் கடந்து விட்டனர். 
 
அவர் யாருடைய பினாமி, எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தன, அவை யாரிடமிருந்து வசூலிக்கப்பட்டவை, அரசுக்கும் அச்சொத்துக்களுக்கும் தொடர்பில்லையா... மீடியாவுக்கு இப்படியான எக்கேள்வியும் எழாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்