திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:42 IST)
திமுக ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட டிவி நல்ல நிலையில் இருந்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுக்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எங்களது ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்சி மற்றும் கிரைண்டர்களை இன்னும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் 
 
ஆனால் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி ஒரு சில வருடங்களிலேயே ரிப்பேர் ஆகி விட்டது. இன்றைய நிலையில் யாராவது திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி நல்ல நிலையில் இருப்பதாக கூறினால் அவர்களுக்கு நான் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என்று அறிவித்துள்ளார்
 
மேலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் மத்திய அரசு பெட்ரோலுக்கான வரியை குறைத்தால் மாநிலங்களும் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்