தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே திமுக கூட்டத்தொடரை புறக்கணித்து வெளியேறியது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்த போது, தமிழக நிர்வாகத்தையும் நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக்கிய ஆட்சி, இந்த அ.தி.மு.க. ஆட்சி. ஆகவே இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையை கண்டித்து வெளிநடப்புச் செய்திருக்கிறோம்.