3 மாவட்டங்களில் மிக கனமழை; 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (13:35 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளப்படி, இன்று நீலகிரி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்