சுங்க கட்டண உயர்வால் கூரியர் கட்டணமும் உயர்வு! – மக்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (12:27 IST)
தமிழ்நாட்டில் உள்ள சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர உள்ள நிலையில் கூரியர் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள சில சுங்க சாவடிகளில் கடந்த மார்ச் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது மீதமுள்ள சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

ALSO READ: செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! – எந்தெந்த சுங்கச்சாவடிகளில்?

இதனால் கனரக வாகனங்களுக்கான சுங்க கட்டணமும் உயரும் நிலையில் கட்டண உயர்வை சமாளிக்க கூரியர் நிறுவனங்கள் கூரியருக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அதன்படி வழக்காமான கட்டணங்களில் இருந்து உள்ளூர் கவருக்கு ரூ.10, வெளியூர் பார்சலுக்கு ரூ.15, வெளிமாநில பார்சலுக்கு ரூ.30 விலையை உயர்த்தி உள்ளன.

10 கிலோ எடைக்கொண்ட பார்சல் கட்டணம் 400 கி.மீக்குள் ரூ.150 ஆக இருந்த நிலையில் தற்போது அது ரூ.170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல 100 கிலோ எடைக் கொண்ட பார்சல்களுக்கு தூரத்திற்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கூரியர் சேவை கட்டண உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்