பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30.. தமிழக அரசு ஏற்பாடு..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (09:53 IST)
கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாயை நெருங்கி விட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 30க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேவை ஏற்பட்டால் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  தக்காளி விலையை போலவே வெங்காயம் விலையையும் விரைவில் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்