ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

Siva

வெள்ளி, 16 மே 2025 (14:00 IST)
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தற்போது ஆடு மாடுகளுடன் நிம்மதியாக இருக்கிறேன்," என்று சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக பாஜக தலைவராக சில ஆண்டுகளாக இருந்து, தமிழகத்தில் பாஜகவை வளர்த்துவிட்டவர் அண்ணாமலை என்று கூறலாம்.
 
இந்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன் தலைவராக இருப்பதற்கிடையே, அண்ணாமலை மன நிம்மதியுடன் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
 
"ஆடு மாடுகளுடன் நிம்மதியாக இருக்கிறேன். விவசாயம் பார்க்கிறேன். நேரம் கிடைத்தால் கோவிலுக்கு செல்கிறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல், என்னுடைய பணியை சந்தோஷமாகச் செய்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், "புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இப்படியே பயணம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
அதே சமயம், "தேசிய அளவில் எனக்கு புதிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா என்பது எனக்கு தெரியாது. இப்போதைக்கு நான் நிம்மதியாக இருக்கிறேன், அது போதும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்