ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 16 மே 2025 (13:35 IST)
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தற்போது டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பல்கலை வெளியிட்ட அறிக்கையில், “அரசியலமைப்பை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில், புதிய மையம் உருவாக்கப்பட உள்ளது. இந்த மையத்தின் செயல்பாடுகள் நீதிபதி சந்திரசூட்டின் வழிகாட்டலின்படி அமையும். மேலும், 'நீதியின் வலிமையில்: டிஒய்சி சிறப்பு விரிவுரைத் தொடர்’ எனும் நிகழ்ச்சி ஜூலை மாதம் தொடங்க உள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பல்கலை துணைவேந்தரும் பேராசிரியருமான ஜி.எஸ். பாஜ்பாய், “அரசியலமைப்புச் சட்டம், மாற்றத்தை எதிர்கொளும் சட்ட நடைமுறை, அடிப்படை உரிமைகள் ஆகிய துறைகளில் ஆழமான விளக்கங்களை சந்திரசூட் வழங்குவார். மாணவர்களுக்கு புதிய பார்வையை உருவாக்க இது உதவும்,” என்று கூறியுள்ளார்.
 
சந்திரசூட் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர். ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சம்மதத்துடன் உடன்பாடாக இருக்கலாம், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அரசியல் சிறப்பு அந்தஸ்து (பிரிவு 370) சட்டப்படி செல்லுபடியாகும் போன்ற தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை.
 
2016-ம் ஆண்டு மே 13ஆம் தேதி நீதிபதியாக, 2022-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற இவர், 2024 நவம்பரில் ஓய்வுபெற்றார். தற்போது கல்வித்துறையில் தொடரும் அவரது பயணம், மாணவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்