இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

வெள்ளி, 16 மே 2025 (14:08 IST)
தமிழகத்தில் இன்று  9 மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மே 20ஆம் தேதி வரை அடுத்த 5 நாள்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று திருவள்ளூர், தருமபுரி, சேலம், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே இந்த ஆண்டு கோடை காலத்தில் பெரிய அளவில் வெப்பம் இருக்காது என்றும் வெப்ப அலைகள் முடிந்துவிட்டது என்றும் இனிமேல் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அந்த வகையில் இன்றே சென்னையில் மதிய நேரத்திலேயே லேசான மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பதும் வெப்பம் அதிகம் இல்லை என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்