பாகிஸ்தானின் பொய் முகம்.. தோலுரிக்க உலகம் சுற்றும் இந்திய எம்பிக்கள்..!

Siva

வெள்ளி, 16 மே 2025 (13:50 IST)
மோடி அரசு, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விளக்கி உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் வகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப  திட்டமிட்டு இருக்கிறது.
 
சசிதரூர் மற்றும் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் இந்த குழுவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொரு குழுவுடனும் வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் இருப்பார்.
 
இந்த முயற்சியின் மூலம், பாகிஸ்தானின் சதி செயல்கள் குறித்து இந்தியா, உலகமே அறியும் அளவுக்கு பேச்சுவார்த்தைகளை நடத்தும். மேலும் பாகிஸ்தானின் பொய் முகம் இதன் மூலம் உலக நாடுகள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
சமீபகாலமாகவே ஒவைசி மற்றும் சசிதரூர் ஆகிய இருவருமே மத்திய அரசின் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளை தாண்டி பாராட்டி வருகின்றனர் என்பதும் பாகிஸ்தானுக்கு எதிராக இவர்களது குரல் ஓங்கி ஒலித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்