மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு விண்ணப்பங்கள்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!

வியாழன், 2 நவம்பர் 2023 (11:24 IST)
தமிழக அரசு சமீபத்தில் மகளிர் உரிமை தொகை என்ற திட்டத்தை கொண்டு வந்த நிலையில் இந்த திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து மகளிர் உரிமை தொகையை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெற தகுதி இருந்தும் பணம் கிடைக்க பெறாதவர்கள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
 
இந்த நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை உரிமைத் தொகை மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரை 11.85 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் அதன் பிறகு தகுதியானவர்களுக்கு வரும் 25ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அதன் பிறகு பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்