நிவாரண தொகையை வங்கி கணக்கில் போடாதது ஏன்? ஒரு விளக்கம்..!

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (15:10 IST)
வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் ரொக்கமாக கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு என்ன காரணம் என்றால் நிவாரணத் தொகை பெறுவோர் வங்கிகளில்  மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருந்திருந்தால் செலுத்தப்படும் தொகை வங்கி எடுத்துக் கொள்ள வாய்ப்ப்புண்டு.

அதுமட்டுமின்றி வங்கி கடன் தவணைகளை செலுத்தாமல் இருந்தாலும் இந்த தொகை வங்கியால் எடுக்கப்பட்டுவிடும். எனவே நிவாரணத் தொகை மக்களுக்கு பயன்படாமல் இருக்க கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட நபர்களின் கையில் கொடுத்து விடுவது தான் சிறந்தது என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  

சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை 6 ஆயிரம் வழங்கும் விரிவான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை கிடைக்க வழி வகுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்