மக்களுக்கு நிவாண உதவிகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி

ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (13:21 IST)
சமீபத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

’கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் பெய்த கன மழையால் புறநகர் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் வெள்ள பாதிப்புகளை சந்தித்தனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட, ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, குன்றத்தூர் வடக்கு ஒன்றியம், மெளலிவாக்கம் ஊராட்சி, பொன்னியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த 700 பொதுமக்களுக்கு, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் த.மோ.அன்பரான்அவர்கள் ஏற்பாட்டில், மழைக்கால நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினோம்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக்கழகத்தின் சார்பில், குன்றத்தூர் வடக்கு ஒன்றியம், மெளலிவாக்கம் ஊராட்சி, கோவிந்தராஜ் நகரில் அண்மையில் பெய்த கன மழையால் பாதிப்புகளை எதிர்கொண்ட, 600 பொதுமக்களுக்கு இன்றைய தினம் அரிசிப்பை - மளிகை பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை இன்று காலை வழங்கினோம்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி, மெளலிவாக்கம் ஊராட்சியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பினை தொடர்ந்து, அங்குள்ள பஜனைகோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு காஞ்சி வடக்கு மாவட்டக்கழகம் சார்பில், உணவு மற்றும் மளிகை பொருட்களை நிவாரண உதவியாக இன்று வழங்கினோம். மேலும், அப்பகுதி மக்களுக்கு எப்போதும் துணை நிற்போம் என்று உறுதியளித்தோம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதி பொதுமக்களுக்கு உதவுகின்ற வகையில், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, மெளலிவாக்கம் ஊராட்சி, சத்தியநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த 600 பொதுமக்கள் - மாற்றுத்திறனாளிகளுக்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக்கழகம் சார்பில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அன்பரசன் அவர்கள் ஏற்பாட்டில், அரிசி - மளிகை பொருட்கள்  உள்ளிட்டவற்றை மழைக்கால நிவாரணமாக பொருட்களாக இன்றைய தினம் வழங்கினோம்’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்