சித்த மருத்துவர் வீரபாபுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (18:48 IST)
சித்த மருத்துவர் வீரபாபுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு!
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு தீவிரமாக இருந்த நேரத்தில் தமிழக அரசு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றை சிகிச்சை மையம் ஆக மாற்றி சித்த மருத்துவர் வீரபாபுவிடம் வழங்கப்பட்டிருந்தது 
 
அந்த சிறப்பு மையத்தில் மட்டும் சுமார் 6,000 பேருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் உயிரிழப்பு ஏதும் இன்றி குணப்படுத்திய பெருமைக்குரியவர் சித்த மருத்துவர் வீரபாபு 
 
பிறகு பல்வேறு காரணங்களினாலும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததாலும் அந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூடப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தன்னை மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் அழைத்திருப்பதாக சித்த மருத்துவர் வீரபாபு கூறியுள்ளார்
 
சாலிகிராமத்தில் ஒரு சிறிய வாடகை கட்டிடத்தில் இருபத்தைந்து படுக்கை வசதிகளுடன் உழைப்பாளி மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சை அளித்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும் போதுமான வசதி இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் திருப்பி அனுப்புவதாகவும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்