இந்தியாவில் இரண்டாம் கொரோனா அலை அதன் உச்சத்தில் இருக்கிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிய, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் தங்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்கவும், அப்படி ஏற்பட்டு விட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் தனி விமானங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு பறக்க ஆரம்பித்துள்ளனராம்.
புதுடெல்லியைச் சேர்ந்த கிளப் ஒன் ஏர் என்ற தனியார் ஜெட் நிறுவனத்தின் சி.இ.ஓ, ராஜன் மெஹ்ரா இதுபற்றி பேசும் போது தனி விமானத்தில் பறக்க வசதி உள்ளவர்கள் அனைவரும் பறந்துகொண்டிருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.