தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை தீவிர ஆலோசனையில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் கூறுகையில் “தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனை செய்யப்பட்டு அறிவிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சலுகைகள் வழங்குவது குறித்தும் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.