பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென படம் எடுத்த பாம்பு.. இளைஞர் பரிதாப பலி..!

Siva

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (14:35 IST)
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில், 21 வயது இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஹேண்ட்பாரில் பாம்பு தோன்றியதால் அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து, பாம்பு அவரை கடித்ததால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கம்பம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் தனது நண்பர் ராம்குமாருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கின் முன்புறம் திடீரென ஒரு பாம்பு தோன்றி ஆடியது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர், பிரேக் பிடிக்க முயன்றார். அப்போது, பாம்பு அவரது கையின் மணிக்கட்டில் கடித்தது.
 
இதையடுத்து, அவர் மயக்கம் அடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், தேனி மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்