கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது லஞ்சக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், நிலைமை பரபரப்பாக மாறியுள்ளது.
மேலும், இது குறித்து விசாரணை நடத்தி, வீணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொச்சி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், மகள்மீது லஞ்சக் குற்றச்சாட்டு இருப்பதால், முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக, பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியபோது, "பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, பினராயி விஜயன் முதல்வர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே விசாரணை நியாயமாக நடக்கும். அவர் பதவி விலக வேண்டும்" என்று கூறினார். மேலும், இதற்காக பாஜக போராட்டங்களை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.