தற்போது வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளில் கொரோனா தொற்று உறுதியாகி ஆக்ஸிஜன் அளவு 94க்கும் கீழ் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர தேவையில்லை என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 90-94 ஆக்ஸிஜன் அளவு உள்ளவர்கள் கொரோனா மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை 3 வகையாக பிரித்து சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.