தமிழகத்தில் மாதத்தில் ஒரு நாள் மின்பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் 5 மணி வரை 8 மணிநேரம் மின் தடை ஏற்படும். ஆனால் இனிமேல் பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே படிப்பதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.