தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் - பன்னீர் செல்வம் !

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (14:03 IST)
தமிழகத்தில் கல்வியில் முதலிடத்தில் இருப்பதால் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அய்யன்தாங்கலில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பன்னீர்செல்வம், ஒரே ஆண்டில் 9 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு தான் என்று தெரிவித்தார்.
 
மேலும், கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்