வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குழும நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் என 64 இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட வருமானவரி சோதனையில் கணக்கில் காட்டாத 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் முறையான கணக்கை மேற்கொள்ளாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதும், அந்த பணத்தில் மறைமுக சொத்துக்கள் வாங்கியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
கணக்கில் காட்டாத 532 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ள நிலையில், வரி ஏய்ப்பு செய்ததை வேலம்மாள் குழுமம் ஒத்துக்கொண்டதாக வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.