அய்யனாருக்கே பூணூலா? சர்ச்சைக்குள்ளாகும் குடியரசு தின ஊர்வலம்!

சனி, 25 ஜனவரி 2020 (11:54 IST)
குடியரசு தின விழா ரத ஒத்திகையில் அய்யனார் சிலைக்கு பூணூல் அணிவித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 71வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் மாநில அரசுகளின் கண்காட்சி ஊர்வலம் நடைபெற உள்ளது.

மாநில அரசுகள் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஊர்திகளை வடிவமைத்து ரத வலம் வருவார்கள். இந்த ரத வலத்துக்கான ஒத்திகை டெல்லியில் நடைபெற்றது. அதில் கொண்டு வரப்பட்ட தமிழக மக்களின் சிறுதெய்வ வழிபாட்டில் முக்கிய கடவுளான அய்யனார் சிலைக்கு பூணூல் அணிவிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அசைவ பிரியராகவும், கோபம் நிறைந்தவராகவுமே மக்களால் வணங்கப்பட்டு வரும் அய்யனாருக்கு பூணூல் அணிந்துள்ளதை பலர் வன்மையாக கண்டித்துள்ளனர். ஆனால் இது புதிதான ஒன்று அல்ல என்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அய்யனார் கோவில்களில் அவர் உடலில் பூணூல் தரித்திருப்பது போல உள்ளதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். இப்படியான சிலை ஊர்வலத்தில் இடம் பெறுவது தமிழ் பண்பாட்டை திரித்து கூற முற்படுவதாக உள்ளது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்