கரும்பூஞ்சை தொற்று; 35 ஆயிரம் கேட்டோம் 3 ஆயிரம் வந்துள்ளது! – மா.சுப்பிரமணியன்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (10:56 IST)
தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதற்கான மருந்துகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில், மறுப்பக்கம் கரும்பூஞ்சை தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை சமாளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு தேவையான மருந்துகளை வழங்க கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்திற்கு கரும்பூஞ்சை தொற்றுக்கான மருந்துகள் வந்தடைந்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழ்நாட்டில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த 35 ஆயிரம் மருந்து குப்பிகள் கேட்டுள்ளோம். தற்போது மத்திய அரசிடமிருந்து 3,060 குப்பிகள் மருந்துகள் கிடைத்துள்ளன” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்