வங்கதேசத்தில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 100 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச நாட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இரவில் நடந்த திருவிழாவில் பானிபூரி சாப்பிட்டவர்கள் தங்களது வீடு திரும்பிய பின்னர் கடும் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைகள் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பானிபூரி கடைக்காரரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.