உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிராச்சி, ஆர்எஸ்எஸ் பிரிவுகளில் ஒன்றான விஸ்வ ஹிந்து பரீட்சத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், " பெண்களைப் போல ஆண்களுக்கும் ஒரு தேசிய ஆணையம் அவசியம்" என்று கூறினார்.
"ஒருபுறம், நாட்டில் மனைவிகளால் துன்புறுத்தப்படும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களை விட ஆண்கள்மீது தான் ஒடுக்குமுறை அதிகமாக உள்ளது. எனவே, ஆண்கள் ஆணையம் இருந்தால் தான் ஆண்களின் பாதுகாப்பிற்கு தேசிய அளவில் ஒரு தீர்வு கிடைக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.