சமீபத்தில் சென்னை, மதுரை, தேனி ஆகிய மூன்று பகுதிகளில் மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று கடலூரில் ஒரு ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி விஜய், முப்பதுக்கு மேற்பட்ட வழக்குகளில் சிக்கியிருந்த நிலையில், சமீபத்தில் லாரி ஓட்டுனர்களை அறிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ரவுடி விஜய் கடலூரில் பதங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். அப்போது, ரவுடி விஜய், போலீசாரை அறிவாளால் தாக்கியதாகவும், இதில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, போலீசார் அதிரடியாக செயல்பட்டு, என்கவுண்டர் மூலம் ரவுடியை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீதும் என்கவுண்டர் நடந்தது. அதேபோல், மதுரை ரிங் ரோட்டில் ரவுடி சுபாஷ் மீது போலீசார் என்கவுண்டர் மேற்கொண்டனர்.