உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

Mahendran

புதன், 2 ஏப்ரல் 2025 (15:59 IST)
பாஜகவின் தேசிய தலைவரை தேர்வு செய்ய காலதாமதம் ஆகிறது என்று சமாஜ்வாதி ஜனதா கட்சியின் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பிய நிலையில், "உங்களைப் போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்வு செய்யப்படுவதில்லை. நாங்கள் 12 கோடி  தொண்டர்களிலிருந்து ஒருவரை தேர்வு செய்வோம். அதனால் கொஞ்சம் கால தாமதமாகும்," என்று அமித்ஷா பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று மக்களவையில் வக்பு வாரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், "உலகின் மிகப்பெரிய கட்சி என்று கூறிக் கொள்ளும் பாஜக, இதுவரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை," என்று விமர்சித்தார்.
 
இதற்கு பதிலளித்த அமித்ஷா, "என் முன்னாள் உள்ள அனைத்து கட்சிகளும் அவர்களின் தலைவரை குடும்ப உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்வார்கள். ஆனால் நாங்கள் 12 கோடி உறுப்பினர்களில் இருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு சில காலம் எடுக்கும். உங்களுக்கு அதற்கான நேரம் இல்லை. நீங்கள் எப்படியும் அடுத்த 25 ஆண்டுகள் தலைவராக இருப்பீர்கள்," என்று பதில் அளித்தார்.
 
அவரது இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்