அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

Siva

புதன், 2 ஏப்ரல் 2025 (16:12 IST)
மறைந்த தமிழக தலைவர்களின் சிகிச்சைக்கு செலவான பணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்  செல்வப்பெருந்தகை  பேசியது, அவைக்குறிப்பில் இருந்து  நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக சட்டமன்றத்தில் இன்று, கச்சத்தீவை மீட்க வரும் தீர்மானத்தை ஆதரித்து பேசிய செல்வப்பெருந்தகை "இந்திரா காந்தி காலத்தில் கச்சத்தீவை கொடுத்த போது 285 ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டு, 6500 கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை இந்தியாவுக்கு வாங்கி கொடுத்தார்?" என்று கூறினார்.
 
மேலும், தனது பேச்சில் மறைந்த தமிழக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பேசிய போது, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அப்போது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "தற்போது முக்கியமான தீர்மானத்தின் போது பேசிக் கொண்டிருக்கிறோம். இதில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்," என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, செல்வப்பெருந்தகை  பேசிய கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்