இதுகுறித்து கூறியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் “முழு ஊரடங்கு, தொற்று பாதிப்பிற்கு விரைந்து சிகிச்சை அளித்தல் போன்றவற்றால் 50 சதவீதத்திற்கும் மேல் இருந்த பாதிப்பு தற்போது 22 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து வந்தாலும் மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல், சானிட்டைசர் கொண்டு கை கழுவுதல் போன்றவற்றை பின்பற்றினால் மட்டுமே மூன்றாம் அலை தாக்கத்திலிருந்து தப்ப முடியும்” என கூறியுள்ளனர்.