தனிமையாக உணர்ந்தால் இந்த எண்ணுக்கு அழைக்கவும்! – எடப்பாடியார் ட்வீட்

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (13:09 IST)
ஊரடங்கினால் வீட்டில் அடைந்திருப்பதால் தனிமையாக உணர்ந்தால் ஆலோசனை பெற தமிழக முதல்வர் தொடர்பு எண்ணை பகிர்ந்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக மக்கள் அன்றாட வாழ்வை துறந்து வீடுகளுக்கும் முடங்கி கிடக்கின்றனர். இதனால் பலர் பல மணி நேரங்கள் வீடுகளில் அடைந்து கிடப்பதால் தீராத தனிமை, மன உளைச்சல் உள்ளிட்டவற்றிற்கு ஆளாவதாகவும், இதனால் மனரீதியாக அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மனநல மருத்துவர்கள் சிலர் கூறி வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ” கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் தனிமையாக உணர்ந்தாலோ, எதிர்மறை எண்ணங்கள் தோன்றினாலோ, கொரோனா குறித்த அச்சம் ஏற்பட்டாலோ கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும். 044-26425585 நமது மருத்துவர்கள் உங்களின் மன அழுத்தம், அச்சம் போக்க உதவுவர்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்