கொரோனா நிலவரம் எப்படி இருக்கு? – ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

வியாழன், 16 ஏப்ரல் 2020 (10:52 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமலில் இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரை 19 நாட்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஊரடங்கில் தொழில் துறைகளுக்கு ஏப்ரல் 20க்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு விதிமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்களுக்கு அளிக்கப்படும் தளர்வை நடைமுறைப்படுத்துதல், அதில் சுகாதாரத்தை பேணுதல், ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்