தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் பரபரப்பாக நடந்து வரும் சூழலில் இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கிறது.
இன்று காலை 10 மணிக்கு கூடும் தமிழ்நாடு சட்டசபையில் 2023 - 24 ஆம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்காக மானிய கோரிக்கை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகிறது.
ஐந்து நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கூட்டத்தொடரில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் ஏற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் காவிரி பிரச்சினை குறித்து முக்கிய விஷயங்கள் என்று சட்டமன்றத்தில் அலசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.