பாஜக உடன் கூட்டணி தொடரும்.. ஏ.சி.சண்முகம் உறுதி..!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (17:39 IST)
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலக்கபட்டாலும் பாஜக கூட்டணியில் நாங்கள் தொடர்வோம் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.  

வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்ற பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் கலந்து கொண்ட ஏசி சண்முகம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த 23 ஆண்டுகளாக நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என்றும் எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணிகள் பிரதமர் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கவில்லை என்றும் ஆனால் பிரதமர் வேட்பாளராக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

 மேலும் மோடியின் தலைமையின் கீழ் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம் என்றும் அவர் உறுதி கூறினார். மோடி தலைமையின் கீழ் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி வருவதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்