13 மாவட்டங்களுக்கு காத்திருக்கிறது கனமழை! – எந்தெந்த மாவட்டங்களில்..?

ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (09:08 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இன்றைக்குயில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய கூடும். நீலகிரி, ஈரோடு, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலைஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்