தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதி எப்போது? முக்கிய தகவல்..!

Mahendran
செவ்வாய், 7 மே 2024 (17:04 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக  தியாகராய நகர் பனகல் பூங்கா அருகே உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது 
 
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு இந்த மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப் போவதாக சென்னை பெருநகர காவல் துறை அறிவித்திருந்தது. தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய மேம்பாலம் அண்ணா சாலை வரை போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரங்கன் தெரு அருகே கீழே செல்ல கட்டப்பட்டிருந்த ரேம்ப் இடிக்கப்பட்டு வருகிறது என்றும், இந்த பணிகள் முடிந்ததும் புதிய மேம்பாலத்துடன் இந்த பாலத்தை இணைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும் மேம்பால பணிகள் முழு வீச்சரில் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்