உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து கருத்து கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
"45 நாட்களில் மனுக்கள் தீர்வு செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், மனுக்கள் பெற்ற 30 நாட்களுக்குள் தீர்வு செய்ய வேண்டும் என்று அரசாங்க ஆணை இருக்கிறது. இவர்கள் எதற்காக 45 நாட்கள் என்று சொல்கிறார்கள்" என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
மொத்தத்தில், "உங்களுடன் ஸ்டாலின் என்று சொல்வதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என்றுதான் சொல்ல வேண்டும்" என்றும், "இதுவரை வாங்கிய மனுக்களுக்கு எத்தனை தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை சொல்வதற்கு துப்பு இல்லை" என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.