சென்னை துறைமுகம் செல்லும் சாலையில் பொதுமக்கள் திடீர் போராட்டம்.. என்ன காரணம்?

Mahendran

செவ்வாய், 7 மே 2024 (11:49 IST)
சென்னை துறைமுகம் சாலையில் திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்ய போராடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னையில் உள்ள சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் சென்னை துறைமுகம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 
 
கோடை வெயில் கொளுத்தி வரும் இந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் முதியவர்கள் உள்பட தூங்க முடியாமல் கஷ்டப்பட்டு உள்ளனர் என்றும் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லை என்பதை அடுத்து மின்துறை அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கம் கேட்டும் எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அதனால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து சாலை மறியல் செய்யும் பொதுமக்களிடம் மின் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்