அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர் விடுதலையான ஒரு சில நாட்களில் அமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகியதால், இந்த வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும், அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தது.
இது குறித்து தமிழக அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்ற நிலையில், நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லையா, செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் வழங்குவதா இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம்.
இந்த மோசடியில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து, இந்த வழக்கின் சாட்சியங்களின் எண்ணிக்கை, அவர்களின் பட்டியலை அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் உதவி உள்துறை செயலாளரை ஒரு எதிர் மனுதாரராக இணைத்து, நோட்டீஸ் பிறப்பித்து , இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.