நீதிபதிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், தீர்ப்புகள் குறித்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், நீதிபதிகள் துறவியர் போல் வாழ்ந்து, குதிரை போல் உழைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அப்போது பல்வேறு விஷயங்களை விளக்கிய நீதிபதிகள், "நீதித்துறை அதிகாரிகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செல்லக் கூடாது. தீர்ப்புகள் குறித்து பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. நாளை தீர்ப்பளிக்கும் போது, அதே தீர்ப்பு ஏற்கெனவே மறைமுகமாக தெரிவிக்கப் பட்டதாக அமையலாம்," என்று தெரிவித்தனர்.
சமூக ஊடகங்கள் ஒரு சிறந்த சாதனமாக இருந்தாலும், நீதித்துறை அதிகாரிகள் துறவியர் போல் வாழ்ந்து, அதே சமயம் குதிரை போல் உழைக்க வேண்டும். நீதித்துறையில் இருக்கும் நபர்கள் பல தியாகங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.