சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனிமவள முறைகேடு தொடர்பான வழக்கில் பொன்மொழி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் சொத்துக்கள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை சம்மனை ஏற்று இன்று அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.