தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியா? அண்ணாமலைக்கு சரியான சவாலா?

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (13:01 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக தற்போது கேஎஸ் அழகிரி இருக்கும் நிலையில் முன்னால் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் என்பவர் புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வரும் 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும் அண்ணாமலைக்கு இணையாக ஒரு தலைவர் வேண்டும் என்பதற்காகவும் முன்னால் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
அண்ணாமலைக்கு போட்டியாக காங்கிரஸ் களமிறக்க சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் தலைநிமிர்த்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்