மோடி வீட்டுலதான் கொடி ஏத்துவார்.. காங்கிரஸ் சொன்னது சரிதான்! - அதிமுக எம்.பி தம்பிதுரை!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (11:42 IST)
அடுத்த ஆண்டு பிரதமர் மோடி அவருடைய வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே கூறியதற்கு, ‘இந்தியா தான் பிரதமர் மோடிக்கு  குடும்பம் என்றும் செங்கோட்டை தான் அவரது வீடு என்றும் கார்கே சொன்னது சரிதான் என்றும் அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். 
 
பிரதமர் மோடி நேற்று தனது சுதந்திரதின உரையின் போது அடுத்த ஆண்டும்  செங்கோட்டையில் நான் கொடியேற்றி வைப்பேன் என்றும் அப்போது பத்தாண்டு கால சாதனையை பட்டியலிடுவேன் என்று கூறினார். 
 
இதற்கு பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூனே கார்கே, ‘அடுத்த ஆண்டு  பிரதமர் மோடி தனது வீட்டில் தான் கொடியேற்றுவார் என்றும் இதுதான் செங்கோட்டையில் அவர் ஏற்றும் கடைசி கொடி என்றும் தெரிவித்தார். 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக எம்பி ’பிரதமர் மோடிக்கு குடும்பம் என்று இல்லை அவருக்கு இந்தியா தான் குடும்பம் செங்கோட்டை தான் அவர் வீடு அதனால் அடுத்த ஆண்டும் அவரே தனது வீட்டில் கொடியேற்றுவார் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்