தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்துவதற்கான திட்டம் ஏதுமில்லை; அமைச்சர் சாமிநாதன் பேட்டி

புதன், 16 ஆகஸ்ட் 2023 (12:39 IST)
தமிழ்நாட்டில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடக்குவதற்கான திட்டம் ஏதும் இல்லை என அமைச்சர் சாமிநாதன் பேட்டி அளித்துள்ளார். 
 
புதுக்கோட்டையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்துவதற்கான திட்டம் ஏதுமில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பல்வேறு நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.  
 
மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக ரூபாய் 3 கோடி 2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.  
 
தமிழக அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் தமிழில் தான் கையொப்பம் இடவேண்டும் என்று அரசாணை உள்ளது என்றும் அதை மீறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார் 
 
மேலும் தமிழ் அறிஞர்கள் விருது விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்