ஆருத்ரா மோசடி.. துபாயில் பதுங்கியிருக்கும் இயக்குனரை பிடிக்க தமிழ்நாடு காவல்துறை ஒப்பந்தம்..!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (12:55 IST)
ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கி இருக்கும் நிறுவன இயக்குனரை பிடிக்க, துபாய் நாட்டுடன் தமிழக காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் செய்துள்ளது.
 
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை கைது செய்ய பயன்படுத்தும், சிறப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்த தமிழ்நாடு காவல்துறை திட்டமிட்டுள்ளது.
 
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மூலம், முதலீட்டாளர்களிடம் ரூ.2,500 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர் அவரது மனைவி உஷா, தலைமறைவாகி துபாயில் வசித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
 
மோசடி பணத்தை, துபாயில் சுமார் ரூ.300 கோடி வரை ஆருத்ரா ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த் நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கி இருக்கும் நிறுவன இயக்குனரை பிடிக்க தமிழக காவல்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்